Nazareth

நாசரேத்தில் இளைஞர்கள் தர்ணா போராட்டம்

நாசரேத்தின் தந்தை என அழைக்கப்பட்டு வரும் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் ஐயரால் நிறுவப்பட்ட நாசரேத் கைத்தொழில் பாடசாலையின் பழமை பாதுகாக்கப்படவும்,பாடசாலை வளாகத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரங் கள் வெட்டப்படாமல் பாதுகாக்கவும் நாசரேத் இளைஞர்கள் தர்ணா மற்றும் பாட சாலை முன்பு போராட்டம் நடத்தினர்.

நாசரேத் நகரை உருவாக்கியவர் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் ஐயர்.1872 ஆம் ஆண்டிற்கு முன்பே எஸ்.பி.ஜி.மிஷனெரியான கனம் ஆர்தர் மர்காஷிஸ் ஐயர் பட்டா எண் 961 ல் கண்ட இடத்தில் ஆதரற்ற பிள்ளைகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அன்று துவங்கிய கைத்தொழில்பாடசாலை அரசு உதவியுடன் இன்று வரை நடைபெற்று வருகிறது.

இதுபோலத்தான் இளைஞர்கள் படித்து விட்டு பொருள் ஈட்ட தொழிற்கல்வியை 140 ஆண்டுகளுக்கு முன்பு நாசரேத் கைத்தொழில் பாடசாலை என்ற பெயரில் நிறுவினார். இந்த பாடசாலையில் கல்விபயின்றவர்கள் தான் உலகின் பல நாடுகளில் பணிபுரிந்து செல்வந்தர்களாக இருந்து வருகின்றனர்.இந்த பாடசா லையை அடிப்படையாகக் கொண்டுதான் நாசரேத்தில் பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி ஆகியவை உருவாகியுள்ளது என்றால் அது மிகையாகாது.

அப்பேற்பட்ட நாசரேத் கைத்தொழில் பாடசாலை இடத்தை தனி நபர் பெயரில் பள்ளி ஆரம்பிக்க அங்குள்ள மரங்களை வெட்டியும், பள்ளியின் பழமையை கெடுக் கும் விதமாக கனோன் ஆர்தர் மர்காஷிஸ் ஐயர் கட்டிய கட்டிடங்களை அடித்து அதில் தனிநபர் ஒருவர் பெயாpல் சிபிஎஸ்இ பள்ளி கொண்டு வருகிறோம் என்ற கூறிக்கொண்டு செயல்பட்டு வரும் திருமண்டல நிர்வாகிகளைக் கண்டித்து நாசரேத் இளைஞர்கள் ஒன்று கூடி கட்டிடங்களை இடிக்க வந்த ஜேசிபி இயந்திரத்தை மறித்து கட்டிடங்களை இடிக்க விடாமல் அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பெரு மன்ற உறுப்பினர் செல்வின் நாசரேத் காவல்நிலையத்தில் நாசரேத் சேகர எல்கைக் குட்பட்ட நாசரேத் கைத்தொழில் பாடசாலை சுமார் 140ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்ட கட்டிடங்களை பழமையை போற்றும் வதமாக அதனை இடிக்ககூடாது எனவும் அங்குள்ள பழமைவாய்ந்த மரங்களை வெடடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்போpல் நாசரேத் காவல்நிலைய ஆய்வாளர் சகாயசாந்தி விசாரணை நடத்திவருகிறார்.இச்சம்பவம் நாசரேத் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.