தமிழ்நாடு காவல் துறையில் உதவி ஆய்வாளர் பதவி – எழுத்து தேர்வு

தமிழ்நாடு காவல் துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு துறை விண்ணப்பதாரர்களுக்கான (Departmental candidates) எழுத்து தேர்வு சிறப்பு அதிகாரியான சென்னை தலைமையிடத்து காவல்துறை தலைவர் திரு. Dr. N.K. செந்தாமரைக்கண்ணன் இ.கா.ப அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் மேற்பார்வையில் இன்று தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு காவல் துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு 100 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 565 துறை விண்ணப்பதாரர்களுக்கு ( Departmental candidates) இன்று (13.01.2020) எழுத்து தேர்வு நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடியில் 695 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 3947 பொது விண்ணப்பதாரர்களும் ((General candidates) 100 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 565 துறை விண்ணப்பதாரர்களும் (Departmental candidates), மொத்தம் 4512 விண்ணப்பதாரர்கள் நேற்றும், இன்றும் தேர்வு எழுத அழைக்கப்பட்டுள்ளனர்.

இதில் நேற்று நடந்த பொது விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வில் 3947 பேருக்கு 3004 பேர் தேர்வு எழுதியுள்ளனர், 943 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இன்று 565 துறை விண்ணப்பதாரர்களுக்கு நடைபெற்ற தேர்வில் 6 பெண் விண்ணப்பதாரர்கள் உட்பட 42 பேர் தேர்வு எழுத வரவில்லை, 523 பேர் தேர்வு எழுதியுள்ளனர். மொத்தம் 4512 விண்ணப்பதாரர்களுக்கு 3527 பேர் தேர்வு எழுதியுள்ளனர், 985 பேர் தேர்வு எழுத வரவில்லை.