ஒரு துளி உதிரத்தை கூட உருவம் செய்து குழந்தையாய் தருபவள் பெண்!!!

உலக மகளிர் தினம் – மார்ச்சு 8 அறிந்து கொள்வோம்!

மார்ச் 8-ம் தேதிக்கும், மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டு பெண் வர்க்கமே அறிந்துகொள்ளாத தினமாகத்தான் இந்த பெண்கள் தினம் இன்று இருக்கிறது.

1789-ம் ஆண்டு ஜூன் 14-ம்‌ தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன் வைத்து, பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்.ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.

1907-ல் தொடக்கம்.1909-ல் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் தேசிய மகளிர் தினம்,1910-ல் இரண்டாவது தேசிய பெண்கள் மாநாடு, 1911-ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற தேசிய மகளிர் தினம்,1912-ல் Bread and roses வாசகம்,1914-1916-ல் ரஷ்யா பெண்களுக்கான போராட்டம்,1917-ல் ரஷ்யாவில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட மகளிர் தினம்,1945 தனி பெண்ணுக்கான உரிமை,உலக பெண்களுக்கான உரிமையாக மாற்றப்பட்ட வருடம்.

1975-1977 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது.

2014-இல் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

அண்மைக் காலமாகத்தான் இந்தியாவில் மகளிர் தின கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது.

வாழ்க மகளிர் தினம்!

பொன்மொழி :

பெண் வயிற்றி லுருவாகிப்
பெண் பாலுண்டே வளர்ந்தாய்
பெண் துணையால் வாழ்கின்றாய்
பெண்ணின் பெருமை உணர்,

பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறென்ன பெருமை இதை விட எடுத்துச் சொல்லுதற்கு?


பெண்ணினத்தின் இயல்பு பெற்ற மக்கள் தம்மை, பிறர் வளர்க்க அனுமதியார், மனமும் ஒவ்வார்,பெண்ணினத்தின் விடுதலைக்கு இந்தத் தியாகம்,
பேருலக அமைதிக்கும் அவசியம் ஆம்…

பெண்ணின் பெருமை :

உலகில் பிறக்கும் குழந்தையின் மூலம் ஒரு தாய், முழு பெண்ணாகிறாள்.

“அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்” சக உயிர்களிடம் ஆதரவு காட்டும் ஆற்றல், மாசில்லா அன்பு, உயிர் மதிப்பில்லா தியாகம் இவை மூன்றும் தான் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் புதைந்திருக்கும் உணர்வு. ஒரு தாயாய், மகளாய், மனைவியாய், சகோதரியாய், நட்பாய், நலம் விரும்பியாய், வழிகாட்டியாய் காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் தான் எத்தனை.. எத்தனை?உணர்ச்சிகளின் கலவையாய் பெண்ணை தவிர சிறந்த வேறொரு உயிரினை உங்களால் உலகில் காட்டமுடியுமா?பெண்களால் பிறந்தோம், பெண்மையை போற்றுவோம்!!

ஒரு துளி
உதிரத்தை கூட
உருவம் செய்து
குழந்தையாய் தருபவள் பெண்!!!

உலக மகளிர் தின நல் வாழ்த்துக்கள்💐💐💐