தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி நடத்திய உலக மகளிர் தின விழா

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி கணிதவியல் துறை , மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தோடு இணைந்து 07.03.2020 அன்று தூத்துக்குடி கோரம்பள்ளம் பஞ்சாயத்தில் உலக மகளிர் தினம் விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள். இவ்விழாவிற்கு மாவட்ட ஆணையர் மனைவி மருத்துவர் டாக்டர்.பவித்ரா ஜெயசீலன் MBBS.,DNB., அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து மகளிர் பற்றி சிறப்புரை வழங்கி, 10.02.2020 முதல் 21.02.2020 வரை தூய மரியன்னை கல்லூரி கணிதவியல் துறையும் உன்னத் பாரத் அபியான் திட்டமும் இணைந்து நடத்திய இரண்டு வார இலவச பனை ஓலை பயிற்சி வகுப்பில் பயிற்சிப்பெற்ற மகளிர் அனைவருக்கும் சான்றிதழ்களையும் வழங்கினார். தூத்துக்குடி கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் திருமதி. செல்வபிராபா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மேலும் மகளிர்களுக்கு பனை ஓலை பயிற்சி அளித்த எம். ஸ்டார் உறுப்பினர் X.ராசாத்தி அவர்களும் வருகை புரிந்து விழாவை சிறப்பித்தார். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கணிதவியல் உதவிபேராசிரியை முனைவர் . அருள் ஜெஸ்டி அவர்களின் உதவியுடனும், வழிகாட்டுதலுடனும் தூய மரியன்னை கல்லூரி இரண்டாம் ஆண்டு கணிதவியல் துறை மாணவிகள் செய்திருந்தனர் .