உலக மகளிர் தினம் விழா : தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 09.03.2020 அன்று உலக மகளிர் தினம் விழாவை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தூத்துக்குடியை சேர்ந்த திருமதி.எபேன் ஜேஸன், M.A. B.Ed., B.D., DCC., ஆலோசகர் மற்றும் சமூக சேவை வழக்கறிஞர் அவர்களும் திருச்சியை சேர்ந்த அருட்சகோதரி. லில்லியன் மேரி osm, சர்வைட் சமூக சேவை இயக்குனர் அவர்களும் வருகை புரிந்து மகளிர் தினத்தை பற்றி சிறப்புரை வழங்கினர்.

இவ்விழாவில் தூய மரியன்னை கல்லூரி முதல்வர் அருட்சகோதரி. முனைவர். A.S.J. லூசியா ரோஸ், கல்லூரி செயலாளர் அருட்சகோதரி. புளோரா மேரி, சுயநிதிப்பிரிவு இயக்குனர் அருட்சகோதரி. மேரி ஜாய்ஸ் பேபி அவர்களும் கலந்து கொண்டனர். ஆங்கிலத்துறை பேராசியர். முனைவர். சுதா ராணி அவர்களும், கணிதத்துறை பேராசியர். முனைவர். ஸ்டெல்லா அற்புத மேரி விழாவின் ஏற்பாடுகளை செய்தனர். விழாவில் எரியும் மெழுகு திரியை கையில் ஏந்தி ஒளியாய் திகழ்வோமென அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் மாணவிகளின் கலை நிகழ்ச்சியுடன் விழா இனிதே நடைபெற்றது.