மகளிர் தின விழா கொண்டாட்டம் : தூத்துக்குடி

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள அனைத்து துறை அரசியல் ஊழியர்களுக்கும் உள் மற்றும் வெளி மைதான விளையாட்டுப் போட்டிகள் இன்று (06.03.20) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 800 அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் கோலப் போட்டி, கவிதைப் போட்டி, பாட்டுப் போட்டி, அந்தாக்ஷரி, தம்ஸரத், பூக்கட்டுதல், நினைவு திறன் போட்டி, சமையல் போட்டி,

புகைப்படத்தில் கண்மூடிக் கொண்டு சரியாக பொட்டுவைத்தல், ஊசியில் நூல் கோர்த்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், ஓட்டப்பந்தயம், மியூசிக்கல் சேர், லக்கிகார்னர், உறியடித்தல், நடனப்போட்டி, மெழுகுவர்த்தி அணையா போட்டி என பல போட்டிகள் நடைபெற்றது.

விழாவானது தூத்துக்குடி மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் திருமதி ரேவதி,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.S.அமுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) திருமதி.கிறிஸ்டி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி. T. தனபிரியா, மாவட்ட வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திருமதி சங்கரி அவர்கள் முன்னிலையில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற்றது.

போட்டிகளைக் இடையே சித்த மருத்துவர் திருமதி.லதா அவர்கள் பெண்களுக்கான பாதுகாப்பு, மற்றும் பெண்கள் உட்கொள்ள வேண்டிய சிறுதானிய பொருட்கள் ஆகியவற்றை பற்றிய ஒரு சிற்றுரை வழங்கினார்.