தூத்துக்குடி சி.வ.அரசு மேல் நிலைப் பள்ளியில் உலக தாய்மொழிகள் தினம் கொண்டாடப்பட்டது…

உலக தாய்மொழிகள் தினம் தூத்துக்குடி சி.வ.அரசு மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தேசிய வாசிப்பு இயக்கத்தின் செயலாளரும் முடிவைத்தானேந்தல் அரசு மேல் நிலைப் பள்ளி ஆசிரியருமான முனைவர் கா. சரவண குமார் அவர்கள் கலந்து கொண்டார்கள். விழாவிற்கு வந்தவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி.செந்தூர்க்கனி அவர்கள் வரவேற்றார்கள்.

தமிழ்மொழியின் சிறப்பு குறித்து முனைவர் கா.சரவணகுமார் அவர்கள் விளக்கிக் கூறினார்கள். உதவி தலைமையாசிரியர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கிக் கவுரவித்தார் .

பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் திரு.அருள் சகாயம் அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு மரக்கன்றுகளை வழங்கி பெருமை சேர்த்தார்கள். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை ஆசிரியர் ஐயப்பன் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்கள். நாட்டுப் பாட விழா இனிதே நிறைவடைந்தது.