தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் உலக விண்வெளி வார விழா…

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் உலக விண்வெளி வார விழா கொண்டாடப்பட்டது, இதனை தொடர்ந்து நடைபெற்ற விண்வெளி கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார், விழாவில் ISRO முன்னாள் இயக்குநர் பத்மஸ்ரீ ஆர்.எம்.வாசகம், இயக்குநர் IPRC திரு.மூக்கையா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முதற்கட்டமாக மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் குத்து விளக்கு ஏற்றினார், பின்னர் கண்காட்சியை திறந்து வைத்த அவர் அங்கு வைத்திருந்த விண்வெளி சம்பந்தமான பதாகைகளை பார்வையிட்டார், விழாவில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டனர்.

விண்வெளி கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்த போது
விண்வெளி கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்ட போது
விண்வெளி கண்காட்சியை மக்கள் பார்வையிட்ட போது