‘தமிழ்’ எழுத்து வடிவில் நின்று மாணவா்கள் உலக சாதனை – வேலூர்

உலக தாய்மொழி தினத்தையொட்டி, வேலூா் மாவட்டம் ஊரீசு கல்லூரியின் தமிழ்த் துறை மற்றும் கணினித் துறையைச் சேர்ந்த 525 மாணவ, மாணவிகள் சுமாா் 5 நிமிடங்கள் 16 விநாடிகள் ‘தமிழ்’ எனும் எழுத்துகள் வடிவில் நின்று சாதனை புரிந்தனா். இந்த சாதனை நிகழ்வை ஜெட்லி புக் ரெக்காா்ட்ஸ் புத்தக நிறுவனம் அங்கீகரித்துள்ளதுடன், அதன் நிறுவனா் டிராகன் ஜெட்லி சான்றிதழ், கேடயம் வழங்கினாா்.