உலக புற்றுநோய் தினம்

உலக புற்றுநோய் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்த புற்றுநோய் தினம், மருத்துவ உலகில் மிக முக்கிய தினம்.

உலகளவில் புற்றுநோய் பாதித்த மக்கள் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில், சீனா, அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

புற்றுநோய் உருவாவதற்கு காரணமாக திகழும் புகைபழக்கத்தையும்,குட்கா போன்ற போதைப் பொருட்களையும் நூறு சதவீதம் இளைஞா்கள்,பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.

புற்றுநோய்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் புகையிலை பொருட்களையும், தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருள்களை விற்பனை செய்யும் சமூக விரோதிகளிடமிருந்தும், உயிர் கொல்லி நோய்யான புற்றுநோயிலிருந்தும், நமது சமூகத்தையும் நமது சமுதாய இளைஞர்களையும். காப்பாற்றிட உறுதி ஏற்போம்.வெற்றி காண்போம்.