உலக ஆஸ்துமா விழிப்புணர்வு : எம்பவர் அமைப்பு

தூத்துக்குடியில் எம்பவர் அமைப்பு சார்பில் உலக ஆஸ்துமா விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.

ஆண்டு தோறும் மே 5 அன்று உலக ஆஸ்துமா விழிப்புணர்வு தினம் என உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி பீச் ரோட்டில் அமைந்துள்ள எம்பவர் மக்கள் மருந்தகம் சார்பில் இத்தினத்தை அனுசரிக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி எம்பவர் சமூக சேவை அமைப்பின் செயல் இயக்குநர் சங்கர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் எம்பவர் மேலாளர் லலிதாம்பிகை கலந்துகொண்டு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பணியாளர்கள் ஜான் வில்பிரட் தீபக், ஹெப்சி வளர்மதி ஆகியோர் செய்திருந்தனர்.