எம்பவர் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது

தூத்துக்குடியில் எம்பவர் சார்பில் உலக உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.; ஆண்டு தோறும் மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்; உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி பீச் ரோட்டில் அமைந்துள்ள எம்பவர் மக்கள் மருந்தகம் சார்பில் இத்தினத்தை அனுசரிக்கும்; வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசிய எம்பவர் சமூக சேவை அமைப்பின் செயல் இயக்குநர் ஆ.சங்கர் கூறியதாவது :

புகையிலை தொழிற்துறையினர் இளைய தலைமுறையினரை ஈர்க்க கையாளும் வழிமுறைகளுக்கு 9 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருடந்தோறும் விளம்பர வகைக்காக செலவு செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் மூலம் 25 பில்லியன் தடவை புகையிலை சம்மந்தமான விளம்பரங்கள் இளைஞர்களை குறிவைத்து வெளியிடப்படுகிறது.

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியன் மக்கள் புகையிலை உபயோகிப்பதால்; பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். பத்தில் 9; புகை பிடிப்பவர்கள் தங்களது 18 வயதிற்கு முன்னரே புகை பிடிக்க ஆரம்பிக்கின்றனர். புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் புற்று நோயால் 25மூ மக்கள் உயிரிழக்கின்றனர். மேலும் தாங்கள் புகை பிடிக்காவிடினும், மற்றவர்கள் புகை பிடிப்பதன் மூலம் உலக அளவில் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டும் இறக்கின்றனர் எனக் கூறினார். நிகழ்ச்சியில் எம்பவர் மேலாளர் லலிதாம்பிகை நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பணியாளர்கள் ஜான் வில்பிரட் தீபக், ஹெப்சி வளர்மதி ஆகியோர் செய்திருந்தனர்.