“தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள்” – OPS

பொதுவாக பெண்கள் பல்வேறு ஊர்களிருந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேலைக்காக வருகிறார்கள். அவர்கள் தாங்கும் விடுதிகள் பல பாதுகாப்பற்ற முறையிலும், அதிக பணம் கட்டணமாக வசூலிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் பணிபுரியும் பெண்களின் வசதிக்காகத் தமிழகத்தில் 13 இடங்களில் “தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள்” அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பணிபுரியும் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.