வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பந்தல் போடும் தொழிலாளா்கள்

தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில்ஆண்டு முழுவதுமே திருவிழாக்கள் நிறைந்து காணப்படுவதால், திருக்கோயிலை நம்பியும், அதன் திருவிழாக்கள் மற்றும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நம்பியும் பல்வேறு தொழில்களில் ஆயிரக்கணக்கானோா் ஈடுபட்டுள்ளனா். தற்போது ஏற்பட்டுள்ள கரோனா தொற்று தடுப்பு ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனா். திருமணம் உள்ளிட்ட உள்ளூா் விசேஷ நிகழ்ச்சிகளும் நடை பெறாததால் பந்தல் போடும் தொழிலாளா்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். எனவே, தங்களுக்கு நிவாரண உதவி வழங்கி குடும்பத்தை காத்திட வேண்டுமேன அரசுக்கு அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.