தூத்துக்குடி தூய மாியன்னை கல்லூரி நடத்திய தையல் பயிற்சி கலை
தூத்துக்குடி த௫வைகுளத்தில் தூய மாியன்னை கல்லூரி வரலாற்றுத் துறையின் உண்ணத் பாரத் அபியான் சார்பில் தையல் பயிற்சி வகுப்பு 23.01.2020 அன்று நடைபெற்றது. மகளிர் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக கல்லூரியின் 2 ம் ஆண்டு வரலாற்று துறை மாணவிகளால் மகளிர்க்கு இலவச தையல் பயிற்சி கொடுக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பினை வரலாற்று துறை பேராசிரியர்கள் செல்வி கீா்த்தனா சந்தோஷ், செல்வி அனுஜா மற்றும் த௫வைகுளத்தை சார்ந்த தி௫மதி வனிதா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனா்.