மகளிர் தின விழிப்புணர்வு பெருமித நடை பேரணி : தூத்துக்குடி

மகளிர் தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்ட சமூகநலத்துறை சார்பில் மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்து, மகளிர் தின விழிப்புணர்வு பெருமித நடை பேரணி நேற்று மாலை நடைப்பெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரணியில் காமராஜ் கல்லூரி, பி‌ஷப் கால்டுவெல் கல்லூரி மாணவிகள், கிராம உதயம் இயக்க பெண்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பேரணியாகச் சென்றனர். பேரணியில் மாவட்ட சமூக நல பொறுப்பு அலுவலர் தனலட்சுமி, கிராம உதயம் மேலாளர் வேல்முருகன், காமராஜ் கல்லூரி உதவி பேராசிரியர் ரமேஷ்கண்ணா, பி‌ஷப் கால்டுவெல் கல்லூரி உதவி பேராசிரியை சையது அலி பாத்திமா, மற்றும் பாதுகாப்பு அலுவலர் செல்வ மெர்சி ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டார்கள்.