பெண்களுக்கான தடகள போட்டிகள் -தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட மூத்தோர் தடகள சங்கம், மற்றும் தூத்துக்குடி இன்னர் வீல் கிளப் இணைந்து பெண்களுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றன. ஓட்டப்பந்தயம் நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் குண்டு எறிதல் உள்ளிட்ட 10 வகையான போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சுமார் 150 பேர் கலந்துகொண்டு போட்டிகளில் பங்கு பெற்றனர். இந்த போட்டிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் துணைவியார் அத்தியாசா நந்தூரி துவங்கி வைத்தார். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிக அளவில் மனச்சோர்வு ஏற்பட்டு வருவதை தொடர்ந்து அவர்களின் மனச்சோர்வை நீக்கும் வகையில் இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றதாக இதன் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த விளையாட்டு போட்டி ஏற்பாடுகளை இன்னர் வீல் கிளப் தலைவர் தனம் ராதா செயலாளர் புனிதவதி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.