கடனை திருப்பி செலுத்த அவகாசம் கோரி, மகளிர் சுய உதவிக்குழுவினர் மனு

காயல்பட்டினத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் நேற்று காலையில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:

எங்கள் சுய உதவிக்குழு மூலம் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று தொழில் செய்து வருகிறோம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரையிலும் தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தி வந்தோம். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் பாதிக்கப்பட்டதால், கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. ஆனால் எங்களுக்கு கடன் அளித்த நிதி நிறுவனம், கடனை தவணை தவறாமல் செலுத்த வற்பு றுத்தி வருகின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு, எங்களுக்கு கடன் அளித்த நிறுவனத்திடம் கால அவ காசம் பெற்றுத் தருமாறு கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.