லாக்டவுன் நீடிக்குமா?? – இன்று ஆலோசனை

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கடும் நடவடிக்கைள் எடுத்த போதிலும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாடு முழுவதும் மத்திய அரசு லாக்டவுனை 3ம் முறை நீட்டித்தது. 3ம் கட்ட லாக்டவுன் இன்றுடன் முடிவுகிறது. மொத்தம் 54 நாட்கள் ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது. இந்நிலையில் அனைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பரிந்துரை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டிருந்தார். இதில் சில மாநிலங்கள் மட்டுமே ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தின.

பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்றும் தற்போது மத்திய அரசு முடிவு செய்து வரும் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை கொரோனா மண்டலங்களை மாநில அரசுகளே முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன.

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு மகாராஷ்டிராவில் அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக , குஜராத், தமிழகம், டெல்லி, ராஜஸ்தான் மத்திய பிரதேசம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 12 மாநிலங்களில் உள்ள 30 நகரங்களில் லாக்டவுன் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த லிஸ்டில் சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்கள் உள்ளன. எனினும் மத்திய அரசு 4ம் கட்ட லாக்டவுன் இன்னும் எத்தனை நாட்கள் நீட்டிக்கப்படும், எவ்வளவு தளர்வுகள் வழங்கப்படும் என்பதை இன்று அறிவிக்க உள்ளது.