பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்துவதற்கு ஏன் இந்த அவசரம்? : திமுக இளைஞரணி மாணவரணி

கரோனா வைரஸ் தொற்று சூழலில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்துவதற்கு முன்பு திமுக இளைஞரணி மாணவரணி மாவட்ட அமைப்பாளர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் என்பது தொடர்பாக :

பத்தாம் வகுப்பு தேர்வு அறிவிப்பு : மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு தேர்வை வைரஸ் அச்சம் காரணமாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி 19 வரை நடத்துவது என அரசு முடிவு செய்தது. பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், தனியார் பள்ளி உரிமையாளர்கள் என பல்வேறு தரப்புகளிடம் இருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு தேர்வு மேலும் தள்ளிவைக்க வேண்டும் என்று எங்கள் கழகத் தலைவர் அவர்கள் வலியுறுத்தி கூறியுள்ளார்.

கழகத் தலைவர் கோரிக்கை : மேலும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரானா வைரஸ் பரவி உள்ள சூழலில் தேர்வு எழுதும் மனநிலையில் மாணவர்கள் இல்லை. மனதளவில் அவர்களை தயார் படுத்திய பிறகே தேர்வை நடத்த வேண்டும். பள்ளி திறக்கப்பட்டு இரு வாரம் சென்ற பிறகு தேர்வு நடத்துவதே சரியான நடைமுறையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் தன் முடிவில் உறுதியாக இருந்தார் பள்ளிக்கல்வித்துறை தேர்வை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டது.

இளைஞரணி மாணவரணி கூட்டம் :
இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு குறித்து விவாதிக்க திமுக இளைஞரணி மாணவரணியின் மாவட்ட மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று முன்தினம் (18.5.20) திங்கட்கிழமை காணொளி காட்சி வழியாக நடைபெற்றது. கொரானா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள சூழலில் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் அதனை தள்ளி வைப்பதற்காக இரு அணிகளின் அமைப்பாளர்கள் விவாதித்தனர். அப்போது விவாதிக்கப்பட்ட பல கருத்துக்களைக் கொண்டு பொதுத்தேர்வை தள்ளி வைக்குமாறு அரசு செயலளருகும், மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மனுக்களாகத் தருவது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஏன் இந்த அவசரம்?

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 16 நாட்கள் தள்ளி ஜூன் 16-ஆம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடத்த போவதாக அறிவித்து புதிய தேர்வு அட்டவணை நேற்று வெளியிட்டது.

உயர்கல்வி துறை தேர்வுகள் ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கும் போது பத்தாம் வகுப்பு தேர்வுக்கு மட்டும் ஏன் இத்தனை அவசரம்? எதுக்கெடுத்தாலும் மத்திய அரசை பின்பற்றும் இந்த அரசு தன் சிஙிஷினி பணிகளுக்கான தேர்வுகளை ஜூலையில் நடத்தும் மத்திய அரசின் முடிவை மற்றும் பின்பற்றாதது ஏன்? பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் ஏன் இந்த அவசரம்? இதுபோன்ற பல கேள்விகள் எழுந்தாலும் 15 நாட்கள் தேர்வை தள்ளி வைக்கும் அரசின் முடிவை இளைஞரணி மாணவரணி உள்ளிட்ட திமுக கழகம் மனதார வரவேற்கிறது. அதேவேளை தேர்வு எழுத வரும் மாணவர்களை கவனமாக கையாண்டு கொரானா வைரஸ் தொற்றில் இருந்து அவர்களைக் காப்பாற்றினார் மட்டும் தேர்வு விஷயத்தில் அரசின் பணி முடிவடையும்.

கோரிக்கை மனு : அந்த வகையில் அரசுக்கு உதவியாக இருக்கும் என்பதற்காக இளைஞரணி மாணவரணி அமைப்பாளர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை இந்த மனுவில் தொகுத்துள்ளோம்.

 • கொரானா வைரஸ் தொற்று இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
 • ஊரடங்கு இன்னமும் விலகி கொள்ளப்படாது நான்காம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
 • 12 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை.
 • நோய்தொற்று நீங்காத நிலையில் 9.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் நோய் தாக்கும் அபாயத்திற்கு உள்ளாகின்றனர்.
 • இதன் காரணமாக பெற்றோர்கள் கடுமையான மன உளைச்சல் அடைந்து உள்ளார்கள்.
 • பொது போக்குவரத்து அனுமதிக்கப்படாத நிலையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், தேர்வு அதிகாரிகளுக்கும், இதர பணியாளர்களுக்கும் தேர்வு மையத்துக்கு செல்ல இன்னல்கள் ஏற்படும்.
 • குறிப்பாக மலைப்பகுதியில் வாழும் மாணவர்கள் பெற்றோர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும்.
 • அனைத்து தேர்வுகளுக்கும் வாகன வசதி உறுதி செய்யப்பட வேண்டும் அப்படி ஏற்பாடு செய்யப்படும் வாகனங்கள் தனிமனித இடைவெளியுடன் அமரும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இருக்க வேண்டும்.
 • ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் என்றால் ஏறத்தாள 9.5 லட்சம் வேலை செய்யும் உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை அதை உடனடியாக உறுதி செய்யப்பட வேண்டும்.
 • விடுதிகளில் தங்கிப் படித்த மாணவர்களுக்கு தங்குமிடம் உணவு குறித்த ஏற்பாடுகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டியது எனவே இவற்றின் மீது அரசு கவனம் செலுத்தி வழியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 • ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் வழங்க அரசிடம் போதுமான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு தொற்று உள்ளதா என்பதை கண்டறிய ஏற்பாடுகள் எதுவும் இதுவரை செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
 • எத்தனை ஆயிரம் மாணவர்கள் தங்கள் பள்ளி இருக்கும் இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து சென்று உள்ளனர் என்று விவரம் அரசிடம் இல்லை எனவே இந்த விவரம் உடனடியாக சேகரிக்கப்பட வேண்டும்.
 • ஊரடங்கு காலத்தில் இவர்களில் பெரும்பாலானோர் மீன் அனுமதி சீட்டு பெற்று தேர்வு மையங்களுக்கு திரும்ப முடியாமல் தவிக்க நேரிடும் அதை தவிர்க்க அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது?
 • பல பள்ளி வளாகங்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான இடங்களாக மாற்றப்பட்டுள்ள சூழலில் அங்கே மாணவர்கள் தேர்வு எழுத செய்வது நோய் தொற்றுக்கு வழி வகுக்கும்.
 • திருமண மண்டபங்கள் பாதுகாப்பானவை அல்ல. நோய்த்தொற்று பரவக் கூடும். அதனால் அவற்றை தவிர்ப்பது நல்லது.
 • கட்டுப்பாடு மண்டலத்தில் உள்ள மாணவர்களின் நிலைமை என்ன? அங்கு எப்படி தேர்வு எழுத முடியும் என்பதற்கான கேள்விக்கு இன்னும் விடையில்லை.
 • எழுதும் மாணவர்களில் யாருக்கேனும் வைரஸ் தொற்று உள்ளதா? அப்படி இருப்பின் அவர்களுக்கு எந்த தேர்வில் விலகல் அளிக்கப்படுமா? கொரானா சூழலில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு வீட்டுக்குள் முடங்கி இருக்கும் மாணவர்கள் தேர்வினை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியாது அவர்களை அரசு மனதளவில் எப்படி தயார் படுத்தப் போகிறது இதற்கென ஆற்றுப்படுத்தல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அதன் பிறகே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
 • நோய் தொற்றும் அபாயத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு பள்ளிகள் திறந்த பின்னர் அவகாசம் அளித்து மாணவர்கள் தங்கள் பாடங்களை நல்ல முறையில் திருப்புதல் செய்வதற்கு வாய்ப்பு அளித்த பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே சரியான அணுகுமுறை ஆனால் தேர்வுக்கு முன் மாணவர்கள் திருப்புதல் செய்துள்ளார்களா இல்லையா என்பதை ஆசிரியர்கள் எப்படி கவனிக்க முடியும் அதற்கு ஏதேனும் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி விவரங்கள் தேவை.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும் மனதில் கொண்டு தேர்வு எழுத வரும் மாணவர்கள் கவனமுடன் கையாண்டு நோய் தொற்றிலிருந்து அவர்களை காத்திடவும் கல்வியில் அவர்களை ஆதரிக்க வேண்டுமாய் அரசை கேட்டுக்கொள்கிறோம்