வாட்ஸ்-அப் – விரைவில் அப்டேட் வெர்ஷன்..!

இண்டர்னெட் வசதி செல்போனில் இணைக்கப்படாமலேயே கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்தும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என வாட்ஸ்-அப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷனில் முதன்மையாக வாட்ஸ் அப் திகழ்ந்துவருகிறது. நண்பர்களுடன் சாட்டிங், செய்திகளை அறிந்து கொள்வது என வாட்ஸ் அப் -ன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

முகநூல் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், பயனாளர்களுக்கு வசதியாகவும் பாதுகாப்பு அம்சங்களுக்காகவும் அவ்வப்போது அப்டேட்களை கொடுத்துவருகிறது. இதில் வாட்ஸ் அப் டெஸ்க்டாப் வெர்ஷனும் புகழ்பெற்ற ஒன்று..

அலுவலக பணிகளுக்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் இந்த வாட்ஸ் அப் -ன் டெஸ்க்டாப் வெர்ஷன், மொபைலை இண்டெர்னெட்டுடன் இணைத்திருந்தால் தான் பயன்படுத்தமுடியும்.

ஆனால் தற்பொழுது மொபைலில் இண்டர்னெட் வசதி இணைக்கப்படாமலேயே கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்தும் வசதியை அந்த நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள வாட்ஸ்-அப் நிறுவனம், எங்களது நிர்வாகம் UNIVERSAL WINDOWS PLATFORM செயலியை NEW MULTI PLATFORM சிஸ்டத்துடன் இணைத்து பணியாற்றவுள்ளோம்.

 இதன் மூலம் உங்கள் செல்போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் வாட்ஸ்-அப்பை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் நாள் குறித்து இன்னும் வாட்ஸ் அப் நிர்வாகம் தெரிவிக்கவில்லை.

விரைவில் இந்த வசதி அறிமுகப்படுத்தினால் கணினியில் வாட்ஸ்-அப் பயன்படுத்தும் பயனாளிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

2 Replies to “வாட்ஸ்-அப் – விரைவில் அப்டேட் வெர்ஷன்..!”

Comments are closed.