வாட்ஸ் ஆப் – Update

வாட்ஸ் ஆப் சேவையை விரைவில் ஒரே நேரத்தில் பல சாதனங்களில் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்கள் வாட்ஸ் ஆப் அக்கௌன்ட்டை உங்களால் தற்பொழுது ஒரே ஒரு சாதனத்தில் மட்டும் தான் பயன்படுத்த முடியும். உங்களின் பழைய சாதனத்திலோ அல்லது வேறு நபரின் சாதனத்தில் உங்கள் வாட்ஸ் ஆப் அக்கௌன்ட்டை பயன்படுத்த முயன்றால் அது நடக்காத காரியமாகும்.

இனி அந்த கவலை வேண்டாம், உங்களின் வாட்ஸ் ஆப் அக்கௌன்ட்டை உங்களுக்குத் தேவையான சாதனங்களில் ஒரே நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கான புதிய சேவையை தான் வாட்ஸ் ஆப் தற்பொழுது சோதனை செய்து வருகிறது.

ஒரே நேரத்தில் பல சாதனங்களில் வாட்ஸ் ஆப் அக்கௌன்ட்டை பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்ற கேள்வி நிச்சயம் எழுந்திருக்கும். உங்களுடைய சாட்கள் அனைத்தும் எண்டு-டு-எண்டு என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உங்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதற்குப் பிரத்தியேக அனுமதியை, உங்கள் பயன்பாட்டில் உள்ள சாதனங்களுக்கு மட்டும் வாட்ஸ் ஆப் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

இதேபோல் வாட்ஸ் ஆப் இன்னும் சில புதிய சேவைகளில் தற்பொழுது சோதனை செய்து வருகிறது. அதில் குறிப்பாக மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸை ஹைடு செய்யும் ஆப்ஷன், ஸ்பிளாஷ் ஸ்கிரீன் சேவை மற்றும் ஆப் பேட்ஜ் இம்ப்ரூவ்மென்ட் சேவை போன்ற சேவைகளை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது என்று வாட்ஸ் ஆப் அறிவித்துள்ளது.