பொதுத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் என்னென்ன தண்டனை ???

தமிழகத்தில் நடைபெறும் 10, 11, 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் அடுத்த 2 முறை தேர்வு எழுத முடியாது. அதேபோல் வினாத்தாள்களை வெளியிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் மாணவர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தமிழக அரசு தேர்வுகள் இயக்கம் தகவல் வெளியிட்டுள்ளது.