தனிமைபடுத்தபட்ட வீடுகளில் உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன?

கொரானா வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து அரசு அறிவித்துள்ளது.

கொரானா நோயால் பாதிக்கப்பட்ட நாடு அல்லது வேறு மாநிலத்தில் இருந்து திரும்பிய ஒரு நபர் அல்லது வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களிடம் உடன் இருந்தால் பிறருக்கு நோய்க்கிருமி பரவுவதை தடுக்க சமுதாயத்தில் இருந்து தன்னை விலக்கி வீட்டில் தனியறையில் தனிமைப் படுத்திக் கொண்டு சில வழி முறைகளை கடைப்பிடிப்பதே வீட்டில் தனிமைப்படுத்தி என்று அழைக்கின்றோம்.

தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறை உடன் கூடிய நல்ல காற்றோட்டமான தனி அறை ஒதுக்க வேண்டும்.

வீட்டில் உள்ள அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட நபர் எந்த காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. மற்றும் வீட்டிற்குள் அங்கும் எங்கும் செல்லாமல் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறையில் இருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.

வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பயன்படுத்திய பெட்ஷீட் மற்றும் உடைகள் ஆகியவற்றை உதிராமல் தனியாக எடுத்து சென்று சோப்பு போட்டு நன்கு துவைத்து வெளியில் காய வைக்க வேண்டும்.

முக கவசம் மற்றும் கையுறைகளை கழற்றிய பின் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

வீட்டில் வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட உடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு காய்ச்சல் இருமல் சளி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே 104 அல்லது 1800120555550 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பேசி ஆலோசனை பெறலாம். மேலும் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்கள் அடுத்த 28 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

வீட்டில் தினமும் மூன்று முறையாவது கிருமிநாசினி கொண்டு கைகளைக் கழுவ வேண்டும் இது அனைத்தும் உங்களின் நலனுக்காக தான் அரசு அறிவுறுத்துகிறது எனப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04429510400,04429510500,9444340496,8754448477 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.