தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து மாற்றுத்திறன் சிறார்களுக்கான ஒரு நாள் புத்துணவு சுற்றுலா பயணத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திப் நந்தூரி , இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து , குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார் .

அதன் பின்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி , இ.ஆ.ப, அவர்கள் முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின்கீழ், தீயால் வீடு இழந்த சாத்தான்குளம் ஊராட்சிய ஒன்றியம் அரசூர் ஊராட்சியை சேர்ந்த திருமதி. ஞானமலர் என்பவருக்கு பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவினை வழங்கினார். அத்துடன் கருணை அடிப்படையில் ஒருவருக்கு சத்துணவு அமைப்பாளருக்கான பணி நியமன ஆணையினை வழங்கினார் . அருகில் , தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு . சிம்ரான் ஜீத் சிங் கலோன், இ.ஆ.ப . , மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திரு.வீரராகவன் , சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு .சங்கரநாராயணன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர் .


தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . சந்திப் நந்தூரி , இ.ஆ.ப, அவர்கள் , சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதார திட்டத்தின் கீழ் , கூட்டு பொறுப்பு குழுக்களுக்கு தொழில்கள் தொடங்க கடன் உதவிகளை வழங்கினார் . அருகில் , தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு . சிம்மரான ஜீத் சிங் கலோன் , இ . ஆ . ப . , சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதார திட்ட மாவட்ட செயலாக்க அலுவலர் திரு . உலகநாதனர் மற்றும் அலுவலர்கள் உள்ளனர் .

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயனடைந்த பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . சந்திப் நந்தூரி , இ.ஆ .ப . , அவர்கள் நினைவு பரிசுகளை வழங்கினார் . அருகில் , இணை இயக்குநர் ( மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ) மரு . பரிதா செரின் , தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ( பொ ) மரு . பாவழன் | ஆகியோர் உள்ளனர் .

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலம் நடைபெற்ற தொற்றா நோய்கள் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . சந்திப் நந்தூரி , இ . ஆ . ப . , அவர்கள் பார்வையிட்டார் . அருகில் , இணை இயக்குநர் ( மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ) மரு . பரிதா செரின் , தூத்துக்குடி அரசு . மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ( பொ ) மரு . பாவழன் ஆகியோர் உள்ளனர் .
