தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. மேலும் அந்த அறிக்கையின் படி தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை வெளியிட்டது.