தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 8 மாவட்டங்களில் வெப்பம் தகிக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கும், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, கரூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில், 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என்பதால், பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் பொதுவாக வானம் தெளிவாக காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு கடற்பகுதிகளில், சூறைக்காற்று வீசும் என்பதால், கன்னியாகுமரி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.