வானிலை அறிக்கை

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் 7 சென்டி மீட்டர் மழையும் ஓசூர், ஒகேனக்கல், பென்னாகரம் ஆகிய இடங்களில் 6 சென்டி மீட்டர் மழையும், சேலம் மாவட்டம் மேட்டூரில் 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.