மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவோம்

கொடிய கொரானா வைரசிற்கு எதிரான யுத்தத்தில் போராடி தன்னுயிர் நீத்த மருத்துவர் சைமன் ஹெர்க்குலஸ் அவர்களுக்கு இன்று 22.04.2020 புதன் இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்த இந்திய மருத்துவர் சங்கத்தின் தமிழ் நாடு பிரிவு முடிவுசெய்துள்ளது.

மருத்துவர் சைமன் ஹெர்க்குலஸ் அவர்கள் நமது கல்லூரியில் பயின்றவர் அந்த வகையில் ஆதித்தனார் கல்லூரி பயின்றோர் கழக உறுப்பினர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வண்ணம் நாமும் இந்திய மருத்துவர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு செலுத்தும் அஞ்சலியில் இணைந்து நம் உணர்வுகளை வெளிப்படுத்துவோம்.

அந்த வகையில் இன்று புதன்கிழமை இரவு 9 மணிக்கு நம் இல்லங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி மறைந்த மருத்துவர் சைமன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

இது உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு நாம் தெரிவிக்கும் நம்பிக்கையூட்டும் உணர்வின் வெளிப்பாடாக அமையட்டும்.

இவண்,ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முன்னாள் மாணவர்கள் சங்கம், சென்னை பிரிவு.