கோவில்பட்டி புதுகிராமம் பழைய மூர்த்தி திரையரங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.தொகுதி பொருளாளர் தேவராசு முன்னிலை வகித்தார்.நகர , ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தி வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கபட்டது. ஊராட்சி பகுதிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் மற்றும் நகர வார்டு பகுதிகளுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கவும் பரிந்துரை செய்யபட்டது. இந்த கலந்தாய்வில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்