தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் போர்க்கப்பல்

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14 ஆம் தேதி இந்தியக் கடற்படை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் 14 மற்றும் 15 ஆம் தேதி போர்க்கப்பல் கொண்டுவரப்பட உள்ளது. அதனை டிசம்பர்14-ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் மதியம் 1.00 மணி முதல் 5.00 மணி வரை பார்வையிடலாம். அதற்கு மறுநாள், 15-ஆம் தேதி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளும், பொது மக்களுக்கும் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை போர்க்கப்பலைப் பார்வையிடலாம். மேலும், பார்வையிட வரும் மக்கள் கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்களது வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். இது குறித்த விவரங்களை 7356218196 என்ற தொலைப்பேசி எண்ணைப் பயன்படுத்தித் தெரிந்து கொள்ளலாம்.