தன்னார்வலர்கள் நேரடியாக உதவ வேண்டாம் : அரசு எச்சரிக்கை

கொரானா தொற்று நோய் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் சில மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மக்களுக்கு உதவுவதாக கூறி கொண்டு சமைத்த உணவையும் பொருட்களையும் வினியோகம் செய்வதாக ஊடகங்கள் மூலம் தெரியவருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்த்து, அதன் மூலம் சமூக இடைவெளியை பின்பற்றி தொற்று நோய் பரவுவதை தடுக்கவே தேசிய பேரிடர் மேலாண்மை சட்ட படியும், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144ன் படியும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசியமான பொருட்களுக்கு மட்டுமே சில குறிப்பிட்ட நேரங்களில் தனித்தனியாக சென்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரானா நோய் தொற்று நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய விரும்பும் நீதியை முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் , பொருட்களாக வழங்க விரும்பினால் அதை சென்னை மாநகரத்தில் மாநகர ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் இடமும் வழங்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெறப்படும் இதர பொருட்களை சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் கண்காணிப்பில் முதியவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் சமூக சமையல் கூடங்களில் சமைத்து உணவு வழங்கவும் தேவைப்படும் ஏழை குடும்பங்களுக்கு பொருட்களாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சில நபர்களும், சில அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளுக்கு புறம்பாக பல்வேறு இடங்களில் உணவுப் பொருட்களையும் அல்லது அத்தியாவசிய சமையல் பொருட்களையும் நேரிடையாக வழங்குவது தடை உத்தரவை மீறும் செயலாகும். இதுபோன்ற கட்டுப்பாடு அற்ற நடவடிக்கைகள் நோய் தொற்று பரவ இச்செயல் வழிவகுக்கும். எனவே அனைவரும் ஊரடங்கு அமலில் உள்ள இத்தருணத்தில் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வழங்கி நோய் தொற்றுக்கு வழி வகுப்பது தவிர்க்கவேண்டும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு உதவி செய்ய விரும்பும் பொருட்களை அதெல்லாம் மாவட்ட ஆட்சித்தலைவர் இடமோ, அல்லது மாநகராட்சியாக இருந்தால் மாநகராட்சி ஆணையரிடம், நகராட்சிகள் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வேண்டிக்கொள்ளப்படுகிறது. இந்த அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கருதி அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களும் காவல் துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.