இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையில் இருந்து விலகும் எண்ணமில்லை – வோடஃபோன் நிறுவனம்

இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையில் இருந்து விலகும் எண்ணமில்லை என வோடஃபோன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில், வோடஃபோன் சேவைகள் நிறுத்தப்பட உள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிக் ரீடு,  இந்தியாவில் தொழில் முதலீடுகளுக்கான வாய்ப்பு மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

ஒட்டுமொத்த வருமானத்தின் அடிப்படையில் அலைக்கற்றை கட்டணத்தை நிர்ணயிக்கவும், நிறுவனங்களின் நிலுவைத் தொகைகளை வசூலிக்கவும் தொலைத் தொடர்பு ஆணையம் வலியுறுத்தி வருகிறது. இதற்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நிக் ரீடு குற்றம் சாட்டினார்.