வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து கப்பல் வருகை தருவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து INS JALASHWA கப்பல் மூலம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் வருகை தருவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர் திரு.டி.கே.ராமச்சந்திரன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து INS JALASHWA கப்பல் மூலம் 02.06.2020 அன்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் வருகை தர உள்ளார்கள். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவர் திரு.டி.கே.ராமச்சந்திரன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் இன்று (01.06.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

நாளை 02.06.2020 அன்று இலங்கை கொழும்பில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 700 பயணிகள் வருகை தர உள்ளார்கள். அவர்கள் இறங்கும் இடத்தில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் இடம், பரிசோதனை முடிந்த பின் பேருந்தில் பாதுகாப்பாக அழைத்து சென்று காத்திருப்போர் அறையில் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், குடிவரவு நுழைவு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், உடைமைகளை ஸ்கேனிங் செய்யும் இடம் மற்றும் பயணிகள் பேருந்துகளில் செல்லும் இடங்கள் மற்றும் காத்திருப்போர் அறையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் கை கழுவும் இடம், கழிப்பறை, பயணிகளுக்கு குடிநீர் பாட்டில்கள் வைக்கப்படும் இடம் ஆகியவற்றை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவர் திரு.டி.கே.ராமச்சந்திரன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.