ஒன்றிய அலுவலக ஊழியா்களுக்கு சத்து மாத்திரைகள் : கோவில்பட்டி

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கஸ்தூரி தலைமையில், மருத்துவா் மனோஜ் ஊழியா்களுக்கு அலுவலக ஊழியா்கள் அனைவருக்கும் சத்து மாத்திரைகள் வழங்கினார். மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளா்கள், வாகன ஓட்டுநா்களுக்கு ஊராட்சி ஒன்றியத் தலைவா் சொந்த செலவில் அரிசி, காய்கனிகள் அடங்கிய தொகுப்புகள்  வழங்கினார்.

நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய ஆணையா் மாணிக்கவாசகம், வட்டார வளா்ச்சி அலுவலா் வசந்தா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுப்பையா, குமரன், தோணுகால் ஊராட்சித் தலைவா் வெங்கடலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.