தற்போது பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூபாய் 100 லிருந்து 150 வரை விற்கப்படுகிறது. அதேபோல் சின்ன வெங்காயத்தின் விலை ரூபாய் 140 இல் இருந்து 180 வரை விற்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் வெங்காயத்தின் தொடர் விலை ஏற்றம் காரணமாக வட மாநிலங்களில் இருந்தும் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் வெங்காயத்தின் இறக்குமதி குறைந்து உள்ளது. இதனை நக்கல் செய்யும் வகையில் டிக்டாக், மற்றும் திருமணத்தின் போது வெங்காயத்தை பரிசாக வழங்குவது, நகைக்கு பதிலாக வெங்காய மாலை அணிவது போன்ற வீடியோ காட்சிகளும் சமுக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் வெங்காயத்தை வெயிலில் வைத்து காய வைப்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
