அரசு மருத்துவமனைக்கு மருந்து, மாத்திரை வாங்க ரூபாய் 10,000 வழங்கிய எம்.எல்.ஏ

விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு மருந்து, மாத்திரை வாங்க சொந்த பணம் ரூ 10 ஆயிரம் சின்னப்பன் எம்.எல்.ஏ வழங்கினார்.
காரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரசு 144 தடை உத்திரவை பிறப்பித்தது. தமிழக மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருள், மருந்து கிடைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்துள்ளார். விளாத்திகுளம் அரசு மருத்துவமனையை சின்னப்பன் எம்.எல்.ஏ.ஆய்வு செய்தார், பணியாளர்களுக்கு சொந்த செலவில் வாகனம் ஏற்பாடு செய்வதோடு மருந்து, மாத்திரை தங்கு தடையின்றி கிடைக்க | 10 ஆயிரம் ரூபாயை தன் சொந்த பணத்தில் வழங்கினார்.