வீரபாண்டிய கட்டபொம்மனை இழிவு படுத்தி சமூக வலைதளத்தில் வீடியோ -கிராம மக்கள் போராட்டம்

வீரபாண்டிய கட்டபொம்மனை இழிவு படுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டவரை கைது செய்யக்கோரி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, வைப்பார் கிராமத்தில், வீரபாண்டிய கட்டபொம்மனை இழிவு படுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டவரை கைது செய்யக்கோரி அக்கிராம மக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், பின்னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள சமயத்தில் திடீரன பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டது கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது !