ஐ.நா வில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து உரையாற்றினார்.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் அதன் 42 வது கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்பதற்காகவும், உலகத் தமிழர்களுடனான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஒரு வார கால சுற்றுப்பயணமாக ஜெனீவா சென்றுள்ளார்.

ஜெனீவா சென்றுள்ள அவர் நேற்று மாலை ஐ.நா சபையின் பிரதான அவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று, ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்தும், அங்கு ஐ.நாவின் மேற்ப்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இரண்டு அமர்வுகளில் உரையாற்றினார்.