சாத்தான்குளம் அருகே உள்ள வேலாயுதபுரம் ஆர்.சி. துவக்கப்பள்ளியின் சார்பில் மீண்டும் நிவாரணப் பொருட்கள் வழங்கல்

சாத்தான்குளம் அருகே உள்ள வேலாயுதபுரம் ஆர்.சி. துவக்கப்பள்ளியின் சார்பில் மீண்டும் நிவாரணப் பொருட்கள்

சாத்தான்குளம் அருகே உள்ள வேலாயுதபுரம் ஆர்.சி. துவக்கப்பள்ளியின் சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் பள்ளியில் படிக்கும் 20 மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ13 ஆயிரம் மதிப்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கியுள்ள நிலையில், மீண்டும் பள்ளியின் கல்விப்புரவலரும் சென்னை தொழிலதிபருமான பரஞ்சோதி செல்வராஜ் சார்பாக பள்ளி மாணவர்கள் வசிக்கும் ஆலங்கிணறு காலனிப் பகுதியில் உள்ள 40 ஏழை குடும்பத்திற்கும் அரிசி, பருப்பு, புளி எண்ணெய் என ருபாய் 25000 மதிப்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.

பள்ளியின் தாளாளரும் சிதம்பராபுரம் பங்குத் தந்தையுமான பபிஸ்டன் முன்னிலை வகித்தார். பள்ளியின் கிராம கல்விக்குழு தலைவரான ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெபமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

முன்னதாக அனைவரும் சோப்பினைப் பயன்படுத்தி முறையாகக் கைகளை கழுவிக் கொண்டார்கள். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந் நிகழ்வினை பள்ளியின் தலைமை ஆசிரியை ஜேசு இராஜகுமாரியுடன் ஆசிரியர் செல்வராஜ் மற்றும் இராஜாத்தி அமைப்பாளர் மாிய விமலா ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.