குறைந்த விலையில் காய்கறி விற்பனை: தூத்துக்குடி பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி

தூத்துக்குடி பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் பொதுமக்கள் காய்கறி
வாங்க வரிசையில் நின்று ஆர்வம்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என தெரிவித்து ஊரடங்கு 144 தடை உத்திரவை அரசு பிறப்பித்துள்ளது. காய்கறி, மருத்து மற்றும் அத்தியாவசிய உணவு கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தூத்துக்குடி தனியார் மார்கெட்டில் காய்கறி விலைகள் அதிகமாக விற்பனை செய்வதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்துள்ளனர். தூத்துக்குடி பண்ணை பசுமை காய்கறி நுகர்வோர் அங்காடியில் குறைந்த விலையில் காய்கறி விற்பனை நடைபெறுகிறது.

காலை 7 மணி முதல் மாலை 2 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக காய்கறிகள் குறைந்த விலையில் டோக்கன் கொடுத்து மக்கள் கூட்டம் அதிகமாக கூட மால் இருக்க சமூக இடைவெளி இடம் விட்டு அனுப்பி விற்பனை செய்யப்படுகிறது.

மக்களின் சேவைக்காக இந்த பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி மிக சிறப்பாக செயல்படுகிறது.