தூ.டியில் காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்கும் : மாவட்டம் நிர்வாகம்

தமிழக்தில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் வருகிற 14 ஆம் தேதி வரை ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி மக்கள் வெளியே நடமாடுவதைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி அங்காடியில் பொதுமக்கள் குறிப்பிட்ட தூர இடைவெளியில் நின்று பொருட்கள் வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது வெளியில் நடமாட்டம் அதிகரித்து வருவதால், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்கும் என மாநகராட்சி நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகிறது.