உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் காய்கறிகள் விற்பனை : வேளாண்மை அதிகாரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 55 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் காய்கறிகள் மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு தமிழக அரசின் முன்னோடி திட்டமான கூட்டுப்பண்ணைய திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வேளாண் கருவிகள் மூலம் உழவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நிலக்கடலை, பருத்தி, கம்பு ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கரோனா பற்றிய விழிப்புணர்வுடன் விவசாயிகள் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 
அறுவடை செய்யப்பட்டதை சந்தைப்படுத்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் தேவையான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமும், நெல் கொள்முதல் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குறுவை மற்றும் சித்திரை பட்டத்துக்கு தேவையான நெல் மற்றும் உளுந்து விதைகள் அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு விவசாயி களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க, இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் ஆகியவை விவசாயிகளின் கிராமங்களிலேயே கிடைத்திட வாகனங்கள் மூலம் நடமாடும் வேளாண் விரிவாக்க மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 

மேலும் வேளாண்மை எந்திரங்கள் இலவசமாக உபயோகப்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது. 55 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் காய்கறிகளை நடமாடும் காய்கறி வண்டிகள் மூலம் கிராமங்களிலும், நகரங்களிலும் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகள் தங்களுக்கு ஏதேனும் வேளாண்மை சம்பந்தப்பட்ட உதவி தேவைப்பட்டால், அருகில் உள்ள அரசு வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம். 

மேலும் உடனடி தேவைகளுக்கு வேளாண்மை உதவி இயக்குனர்களை கோவில்பட்டி 97877 32912, கயத்தாறு 99408 39014, விளாத்திகுளம் 94430 02181, புதூர் 82480 80922, ஓட்டப்பிடாரம் 97884 25208, செய்துங்கநல்லூர் 98652 52270, ஆழ்வார்திருநகரி 94421 56347, ஸ்ரீவைகுண்டம் 63800 80859, திருச்செந்தூர், உடன்குடி 94434 34550, சாத்தான்குளம் 94863 35337, தூத்துக்குடி 75988 57802 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு வேளாண்துறையின் சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.