இளைஞர் காங்கிரஸ் சார்பில் 2600 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்- ஊர்வசி அமிர்தராஜ் வழங்கினார்.

சாத்தான்குளம் வட்ட பகுதியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் 2600 குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலர் ஊர்வசி அமிர்தராஜ் வழங்கினார்.

சாத்தான்குளம் வட்டத்தில் பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலர் ஊர்வசி அமிர்தராஜ் சார்பில் சாத்தான்குளம் வட்டத்துக்குட்பட்ட கருங்கடல் கிராமத்தில் 300 குடும்பங்களுக்கும், சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் 600 குடும்பங்களுக்கும், பெரிய தாழையில் 1700குடும்பங்கள் என மொத்தம் 2600 குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களை ஊர்வசி அமிர்தராஜ் வழங்கினார்.

மேலும் பெரியதாழையில் மக்களின் கோரிக்கையை ஏற்று ஊர்வசி அமிர்தராஜ், ஆண்டுக்கு தலா 5பேர் என தனது பொறியியல் கல்லூரியில் இலவசமாக பயில வைப்பதாகவும், பெரியதாழையில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டட பணிக்கு உரிய நிதி வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.
மேலும் இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடிதெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஸ்ரீராமன் ,சென்னை வடக்கு மாவட்ட தலைவர் திரவியம், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயசீலன் துரை, இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலர் இசைசங்கர், சாத்தான்குளம் ஒன்றிய திமுக செயலர் ஏ.எஸ்.ஜோசப், சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் விபி. ஜனார்த்தனன், காங்கிரஸ் ஊடகப் பிரிவு மரியாஜ், தெற்கு மாவட்ட பட்டதாரி பிரிவுதலைவர் சிவராஜ் மோகன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலர் சிவனனைந்த பெருமாள், முன்னாள் பேருராட்சி மன்ற உறுப்பினர் லெ. சரவணன் முன்னாள் காங்கிரஸ் நகர தலைவர் கண்மணிஜெயப்பிரகாஷ், வட்டார விவசாயபிரிவு தலைவர் பார்த்தசாரதி, திமுக மாவட்ட பிரதிநிதி இந்திரகாசி, மாநில பொதுக்குழு உறுப்பினர் பசுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Credits: Tamil Anjal Seithigal