master

இன்று மாலை வெளியாகும் மாஸ்டர் பட செகண்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட்

இயக்குனர் அட்லி இயக்கத்தில் பிகில் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அடுத்ததாக மாநகரம் மற்றும் கைதி படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் கல்லூரிப் பேராசிரியராக நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படம்.

தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இது விஜயின் 64வது படமாகும்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பொங்கல் மற்றும் விஜய்சேதுபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. கண்டிப்பாக இதழ் வெளியீட்டு வி விஜய் மற்றும் விஜய் ரசிகர்கள் பொங்கல் பரிசாக நினைத்து கொண்டு வருவார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

-seithikkural

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *