கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஒன்றிய கவுன்சில் கூட்டம்: தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஒன்றிய கவுன்சில் கூட்டம் நேற்று தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமை தாங்கினார். இதில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட கிராமங்களில் கரோனா தடுப்புப் பணி மேற்கொள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கிருமி நாசினி தெளித்தல், முகக்கவசம், லைசால், சோப்பு திரவம் வாங்குதல் முதலியனக்கு ஆன செலவினங்கள் மற்றும் நடைமுறை செலவினங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்பொழுது பேசிய குலையன்சரிசல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் சிலர் தங்களது பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், ஆனால் ஊராட்சிஒன்றிய அறிக்கையில் எங்களது பகுதிகளில் பணிகள் நடைபெற்றது போல கணக்கு காண்பித்துள்ளதாகவும் கூறி அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.