இந்தியாவில் கடந்த பல மாதங்களாக வாகன விற்பனை மிகவும் மந்தகதியில் உள்ளது. இந்திய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் வரையிலான 6 மாதத்தில் 96.96 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தன. ஆனால் கடந்த ஆண்டு 1.15 கோடி இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. உள்நாட்டில் விற்பனை சரிவு கண்ட நிலையிலும் வெளிநாட்டில் விற்பனை அதிகரித்துள்ளது. 2019 ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் இந்திய இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மொத்தம் 17.93 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளன. சென்ற ஆண்டின் இதே காலத்தில் இந்நிறுவனங்கள் 17.23 லட்சம் வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்து இருந்தன. ஆகவே இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி 4 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.
