தூய மரியன்னை கல்லூரி நடத்திய இரண்டு வார இலவச பனையோலை பயிற்சி வகுப்பு

தூய மரியன்னை கல்லூரி நடத்திய இரண்டு வார இலவச பனையோலை பயிற்சி வகுப்பு: கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் கணிதவியல் துறை, மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தோடு இணைந்து தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் கிராமப்பெண்களுக்கு இலவசமாக பனை ஓலை தொழில் முனைவோர் பயிற்சி வகுப்பானது 10.02.2020 முதல் 21.02.2020 வரை சிறப்பாக நடைபெற்றது. இப்பயிற்சியானது எம் ஸ்டார் உறுப்பினர் திருமதி.ராஜாத்தி அவர்களால் சிறப்பாக அவ்வூர் பெண்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. இவ்வகுப்பில் பனை ஓலையை பயன்படுத்தி அன்பளிப்புப் பெட்டிகள்,தொப்பிகள்,கூடைகள்,பென்சில் வைக்கும் பெட்டிகள்,தட்டுகள் முதலிய பயனுள்ள பொருட்கள் செய்வது குறித்து அப்பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வகுப்புக்கான ஏற்பாடுகளை தூய மரியன்னை கல்லூரியின் UBA -வின் ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி. முனைவர்.குழந்தை தெரஸ் மற்றும் உதவிப் பேராசிரியை முனைவர்.அருள் ஜெஸ்டி அவர்கள் செய்திருந்தனர்.