இருசக்கர வாகனங்களில் இருவர் செல்ல தடை : தூத்துக்குடி மாவட்டம்

கரோனா பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனிடையே, ஆழ்வாா்திருநகரியில் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனா். கரோனா தொற்று பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இருசக்கர வாகனத்தில் இருவா் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனா்.

பொது இடங்களில், கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற விதியை இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் பின்பற்ற வேண்டும் என இரு சக்கர வாகனத்தில் ஒருவா் மட்டுமே செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனா். இதனால், கணவன், மனைவி இரு சக்கர வானகத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போலீஸாரின் கடும் நடவடிக்கையால் பொதுமக்கள் கடைகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். எனவே, பொதுமக்களுக்கு 3 வண்ணங்களில் அடையாள அட்டை வழங்கி குறிப்பிட்ட நாள்களில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.