தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரணம் குணம் அடைந்த 2 நபர்களை வீட்டுக்கு வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி இன்று (16.05.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரணம் குணம் அடைந்த குணம் அடைந்த திருச்செந்தூர் வட்டம் மழவராயநத்தம் மற்றும் எப்போதும்வென்றான் ஆகிய பகுதிகளை சேர்ந்த 2 நபர்களை பழங்களை வழங்கி 14 நாட்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுரைகளை வழங்கி வீட்டுக்கு வழி அனுப்பி வைத்தார்.
பின்னர் ஆட்சியர் தெரிவித்தாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் வரை நமது மாவட்டத்தில் 48 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 27 நபர்கள் கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டது. இதில் 1 நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பின்பு 15 நாட்களாக கொரோனா தொற்று இல்லாத நிலையாக இருந்தது. இன்று தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரணம் குணம் அடைந்த திருச்செந்தூர் வட்டம் மழவராயநத்தம் மற்றும் எப்போதும்வென்றான் ஆகிய பகுதிகளை சேர்ந்த 2 நபர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து 14 நாட்கள் வீட்டிலே தனிமையாக இருக்க அறிவுரைகளை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு நபர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 17 நபர்களும், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 1 நபரும் என மொத்தம் 18 நபர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. வெளி மாவட்டத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களை கண்டறிந்து 15 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடி அருகில் 7 பிரி கொரான்டைன் சென்டர் 700 படுக்கைகள் உடன் தயாராக வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் வெளி நாட்டில் இருந்து வருகை தந்த 4 நபர்களையும் 7 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளது.
இதுவரை நமது மாவட்டத்தை சேர்ந்த 2,000 தொழிலாளர்கள் பிற மாநிலத்தில் இருந்து வருகை தந்துள்ளார்கள். சுமார் 200 நபர்கள் வரை பிரி கொரான்டைன் சென்டரில் வைக்கப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று இல்லாத நபர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து தனிமைபடுத்தப்படுகிறது. கொரோனா தொற்று உறுதி செய்த நபர்களை தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, உறைவிட மருத்துவர் சைலேஸ் ஜெபமணி மற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்